சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்குட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்களுக்கு போதுமான சுகாதார வசதி இல்லாததால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தையொட்டி திடக்கழிவுகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுகாதார வசதி ஏற்படுத்தலாமே!