ராக்கிப்பட்டி பெருமாள் கோவில் அடிவாரத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியன அருகருகே செயல்படுகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் சாலையோரம் பள்ளி இருப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பள்ளி இடைவேளை நேரங்களில் மாணவர்கள் சாலையை கடந்து சென்று விளையாடுகின்றனர். எனவே இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம் அமைக்க வேண்டும்.