திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே பஸ் நிறுத்தம் அமைக்காமல் அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, பயணிகளின் வசதிக்காக கலெக்டர் அலுவலகம் எதிரே புதிய பஸ் நிறுத்தம் அமைத்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.