நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட பெருவிளையில் சி.எஸ்.ஐ. ஆலய தெரு கிறிஸ்டோபர் காலனி உள்ளது. இந்த பகுதியில் அரசு பொது சுகாதார துணை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் அதன் சுற்றுவட்டார மக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த மையம் பயன்பாடின்றி குப்பை கிடங்காக மாறி உள்ளதுடன், கட்டிடமும் சிதிலமடைந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கட்டித்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-முகமது சுஹைல், பெருவிளை.