விபத்து அபாயம்

Update: 2024-11-10 08:18 GMT

நாகர்கோவில் ராணித்தோட்டம் அனந்தன்பாலத்தில் இருந்து கோணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் தொடக்கத்தில் உள்ள கழிவுநீர் ஓடை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சேதமடைந்து காணப்படுகிறது. இதே சாலையில் ஐ.எஸ்.ஆர்.ஓ. காலனி செல்லும் பாதையிலும் இதேபோல் ஓடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்து கழிவுநீர் ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்