செங்கோட்டைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-11-03 17:36 GMT

திருப்பூரில் தென்மாவட்ட தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைபார்க்கிறார்கள். இவர்கள் பணி முடிந்து சொந்த ஊர் செல்ல வேண்டும் என்றால் நள்ளிரவு 12 மணியாகிறது. ஆனால் கோவில் வழியில் இருந்து தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரவு 10.15 மணிக்கு மேல் பஸ்கள் இல்லை. அப்படி போக வேண்டும் என்றால் மதுரை மாட்டுத்தாவணி சென்று அங்கிருந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும். இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்ளுக்கு ஆளாகிறார்கள். எனவே நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டைக்கு பஸ்கள் இயக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்