திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு விசுவாம்பாள் சமுத்திரத்தில் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை இயக்குவதற்காக மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த அறை பயனற்று போனதால் பொதுமக்களின் கழிவு பொருட்கள், குப்பைகள் அங்கே கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மின் மோட்டார் அறையை அகற்றி சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.