செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு பள்ளிவாசல் அருகில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?