உத்தமபாளையம் தேரடி வளைவு அருகில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இடத்தில் சரியாக மண்ணை நிரப்பாததால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பள்ளத்தை விரைந்து மூட வேண்டும்.