ஒட்டன்சத்திரம் தாலுகா ஜவ்வாதுபட்டியில் இருந்து மார்க்கம்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. இந்த தொட்டியை தாங்கும் தூண்கள் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.