குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. அவை சாலையில் நடந்து செல்வோரை விரட்டுகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகளை கேட்டு கொள்கிறேன்.