சென்னை அண்ணாநகர், திருவீதி அம்மன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டிட பணி ஒன்று நடந்தது. இதற்காக தற்காலிகமாக அந்த பகுதியில் தொட்டிகள் அமைக்கப்பட்டது. இந்த தொட்டிகள் சரியான பராமரிப்பு பணிகள் இல்லாததால் இதில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும், மழைநீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் நிலையுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.