பரசேரியில் இருந்து வில்லுக்குறி செல்லும் சாலையில் கொன்னக்குழிவிளை அருகில் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. நான்கு ரோடுகள் சந்திக்கும் இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் இந்த சந்திப்பு பகுதியில் போதை ஆசாமிகள் மது குடிக்கின்றனர். மேலும், சிலர் போதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள், பள்ளி மாணவிகள் அந்த பகுதியை அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு மது குடிப்போர் மற்றும் வாகனத்தில் சாகத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.