திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிட வசதி இல்லாததால் வாடகை கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் ரேஷன் பொருட்களை போதுமான அளவுக்கு இருப்பு வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.