பழனி பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.