சத்தியமங்கலம் அருகே அணையப்பாளையம் கிராமம் குட்டைத்தோட்டத்தில் நடப்பட்ட மின் கம்பம் பலத்த காற்றால் முறிந்து சாய்ந்த நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்பட்ட மின்கம்பம் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.