சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.