புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் பட்டுப்போன நிலையில் பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுப்போன நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.