திருச்சி கீழகல்கண்டார்கோட்டை, மீனாட்சி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மழைபெய்யும்போது மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.