போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-10-27 11:24 GMT

ஊட்டி சேரிங்கிராசில் இருந்து குன்னூர் சந்திப்பு வரை உள்ள சாலையோரத்தில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சிலர், வாகனங்களை அருகில் உள்ள ஓடையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து கழுவி வருகின்றனர். இதுபோன்ற செயலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் நடைபெறுகிறது. இதனால் அங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்