ஈரோடு வெண்டிபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக கட்டளை கதவணை கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள மேம்பாலம் ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் மேம்பாலத்தில் அபாயகரமான பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?