குறிஞ்சிப்பாடி அம்பேத்கர் நகரில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. இதனால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பழுதடைந்த கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும்.