உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வரும் பெண்கள், கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருபவர்களும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.