சென்னை வடபெரும்பாக்கம், 17-வது வார்டு அலுவலகம் அருகில் சீனாவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் சரியான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. குளத்தில் குப்பைகள், பாட்டில்கள் போடப்பட்டுள்ளதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குளத்திற்கு பாம்புகள் படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.