சென்னை பெசன்ட் நகர் 1-வது அவென்யூ, இந்தியன் வங்கி அருகில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதம் அடைந்து இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கால்வாய் மூடியை சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.