சிவகிரி தாலுகா மேட்டுப்பட்டி இந்திரா காலனி தெருவில் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக இல்லாமல் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.