சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி பஸ் நிறுத்தத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி நீண்ட நாட்கள் ஆகியும் மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன் இரவு நேரங்களில் நிழற்குடை கட்டிடம் மது பிரியர்களின் கூடாரமாகவும் திகழ்கிறது. எனவே பயணிகளின் நலன் கருதி நிழற்குடையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.