பெரம்பலூர் மாவட்டம் காரையில் இருந்து ஆலத்தூர் செல்லும் சாலை ஓரத்தில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்த மழைநீர் வடிந்து செல்ல வழி இன்றி சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் செல்லும்போது பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.