கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மரப்பாலம் முதல் புளியம்பாறை வரையிலான சாலையில் இருபுறமும் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகின்றன. மேலும் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் பயணிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. அத்துடன் அந்த புதர் செடிகளில் வனவிலங்குகள் மறைந்து இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த புதர் செடிகளை அகற்றி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.