கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட விராலிகாடு-கண்ணனூர் சாலையில் ஓடைக்கரை பகுதியில் மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு வடிகால் ஓடைப்பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி வடிகால் ஓடையை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.