சிறுபாக்கம் பகுதிகளில் அதிகளவில் குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தின்றும், சேதப்படுத்தியும் செல்கின்றன. விரட்ட வருபவர்களையும் கடிக்கப்பாய்கின்றன. சிறுவர்களின் கைகளில் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பிடுங்கிச்சென்றுவிடுகின்றன. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.