ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் மண்டலத்துக்குட்பட்ட 9-வது வார்டான எஸ்.எஸ்.பி. நகர் குறிஞ்சி நகரில் ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை உள்ளது. இங்குள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் முட்புதர்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு அடைந்து நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. உடனே முட்புதர்கள், குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?