சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதனால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியோர் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.