கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெயர் பலகையானது சில மாதங்களுக்கு முன்பு பெயர்ந்து சாலையோர புதருக்குள் விழுந்தது. பின்னர் புதிய பெயர் பலகை அமைக்கவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் வழி தெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே அங்கு மீண்டும் ஊர் பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.