பெரம்பலூர் ஏ.இ.ஓ. அலுவலகம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்திவிட்டு செல்கின்றனர். மேலும் அவர்கள் மது பாட்டில்களையும், தின்பண்டங்களை வாங்கி வரும் பிளாஸ்டிக் கவர்களையும் அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.