ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரம் உள்ள நடைபாதையில் மின் கம்பம் உடைந்து கிடக்கிறது. வெட்டப்பட்ட மர துண்டுகள் ஆங்காங்கே போடப்பட்டு உள்ளது. இதனால் நடைபாதையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.