சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள இலவச பொது கழிப்பிடம் சரியாக பராமரிக்கபடாமல் உள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கழிப்பிட வசதி சரியாக இல்லாததால் அந்த பகுதிக்கு செல்லும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கழிப்பிடத்தை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.