பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நூலகத்தில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது நிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைபெய்யும்போது கட்டிடத்தின் உள்பகுதியில் மழைநீர் புகுந்து நூல்கள் வீணாகி வருகிறது. மேலும் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் போதிய இட வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வாசகர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.