மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் அருகில் வணிக வளாக கட்டிடமும், அதன் மாடியில் மழைநீர் வெளியேற்றுவதற்கான குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சாலையில் அருவிபோல் விழுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாதசாரிகளுக்கு இடையூறு இன்றி மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.