கொட்டாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் தெற்குபுறம் ஒரு கால்வாயும், அதன் மேல் பகுதியில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் ஒரு பக்கத்தில் விபத்து தடுப்பு சுவர் உயரம் குறைவாகவும், மறுபக்கத்தில் சுவர் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தின் இருபுறமும் உயரமான விபத்து தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?.