புதுப்பேட்டை அருகே சிறுவாத்தூரில் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.