போடி, தேவாரம் பகுதிகளில் இருந்து உத்தமபாளையம் வழியாக தேனிக்கு இயக்கப்படும் பஸ்கள், உத்தமபாளையம் போலீஸ் நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. அதேபோல் கம்பத்தில் இருந்து உத்தமபாளையத்துக்கு வரும் பஸ்களும் இதே இடத்தில் தான் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. ஆனால் அங்கு பயணிகளுக்கான நிழற்குடையோ, பஸ் நிறுத்தம் என்ற அறிவிப்போ இல்லை. எனவே பஸ் நிறுத்த அறிவிப்பு பலகையை வைப்பதுடன், பயணிகள் நிழற்குடையும் அமைக்க வேண்டும்.