வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் வீரகாளியம்மன் கோவில் கீழ்புறம் உள்ள ஊருணியில் குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டப்பட்டது. இதற்கு மூடி அமைக்காததால் திறந்தவெளியில் உள்ளது. அந்த வழியாக செல்கிறவர்கள் மற்றும் கால்நடைகள் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றுக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.