வேடசந்தூர் பகுதியில் ஒரு கட்டிடத்தில் ஆடு வெட்டும் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.