காயல்பட்டினம்-திருச்செந்தூர் சாலையில் தனியார் மருத்துவமனை, ஓடக்கரை தனியாா் விளையாட்டு திடல், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய இடங்களில் குழாய் பாலங்கள் உள்ளன. இதன் வழியாக மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்பட்டு சாலையிலும் தேங்குகின்றன. அந்த குழாய் பாலங்களை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.