லால்குடி பெருவளநல்லூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சைக்கு கூட 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லால்குடி அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்ககூடிய சூழ்நிலை உள்ளது. எனவே பெருவளநல்லூரி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.