கரூர் வெண்ணெய்மலை தனியார் பள்ளி எதிரில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் திறந்த வெளியில் நின்று பொதுமக்கள் பஸ் ஏறி வருகின்றனர். எனவே வெயில், மழையால் பாதிப்படையும் பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்ணெய்மலை தனியார் பள்ளி எதிரே பயணிகள் நிழற்குடை கட்டி கொடுத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.