அகஸ்தீஸ்வரம்-கொட்டாரம் நெடுஞ்சாலையில் அகஸ்தீஸ்வரம் ஊரில் ஒரு தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு அரசுக்கு சொந்தமான காலி மனையும் அதில் சேதப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் சுமார் 30 ஆண்டுகளாக பயன்பாடற்று காணப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் ஊரில் உள்ள தபால் நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் உள்ளது. மேற்குறிப்பிட்ட காலி மனையில் தபால் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.