செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் 34-வது வார்டு, கண்ணம்மாள் குறுக்கு தெருவில் சாலை அருகில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.