பொதுமக்கள் அச்சம்

Update: 2024-09-29 14:18 GMT

விருதுநகர் மாவட்டம் பட்டேல் ரோட்டில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் பல நாட்களாகவே அதன் ஏணி படி மற்றும் தொட்டியின் தூண்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக அதனை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்